ட்ரூக் பட்ஸ் புரோ வயர்லெஸ் இயர்போன்

இந்தியாவைச் சேர்ந்த ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ட்ரூக் நிறுவனம் பட்ஸ் புரோ என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
ட்ரூக் பட்ஸ் புரோ வயர்லெஸ் இயர்போன்
Published on

இது சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது. இதில் டைட்டானியம் ஸ்பீக்கர் உள்ளதால், திரையரங்குகளில் இசையைக் கேட்பது போன்ற அனுபவத்தை இந்த வயர்லெஸ் இயர்போனிலும் கேட்டு மகிழலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புளூடூத் 5.2 இணைப்பு வசதி கொண்டது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 48 மணி நேரம் செயல்படும். 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 2 மணி நேரம் இது செயல்படும். கருப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள இந்த இயர்போனின் விலை சுமார் ரூ.1,699.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com