மேம்படுத்தப்பட்ட டி.வி.எஸ். அபாச்சே

இரு சக்கர வாகன உற்பத்தியில் புகழ்பெற்ற இந்திய நிறுவனமாகத் திகழும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் தனது அபாச்சே மாடலில் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட டி.வி.எஸ். அபாச்சே
Published on

அபாச்சே ஆர்.டி.ஆர் 160 மற்றும் ஆர்.டி.ஆர் 180 மாடல்கள் இவ்விதம் அறிமுகமாகியுள்ளன. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.18 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. இதில் 180 மாடல் விலை சுமார் ரூ.1.30 லட்சம். இவ்விரு மாடலிலும் சிறிது திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வாகனத்தின் எடையும் சற்று குறைக்கப்பட்டுள்ளது. முகப்பு விளக்கு மற்றும் புளூடூத் இணைப்பு வசதி கொண்டவையாக வந்துள்ளன. முந்தைய மாடலை விட இதன் விலை சுமார் ரூ.5 ஆயிரம் முதல் சுமார் ரூ.10 ஆயிரம் வரை அதிகமாகும். ஆர்.டி.ஆர். மாடல் 16.04 ஹெச்.பி. திறனை 8,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 13.85 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும்.

இதேபோல ஆர்.டி.ஆர் 160 மாடலின் எடை சுமார் 2 கிலோவும் (137 கி.கி.), ஆர்.டி.ஆர் 180 மாடலின் எடை ஒரு கிலோவும் (140 கி.கி.) குறைந்துள்ளது. இவை இரண்டும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வசதி கொண்டது. இரண்டிலுமே டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் வசதி கொண்ட மாடல்கள் வந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com