வானவில் : எக்ஸ்மேட் லூனா புரொஜெக்டர்

நுகர்வோர் டிஜிட்டல் சாதனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் எக்ஸ்மேட் நிறுவனம் தற்போது லூனா 2.0 என்ற பெயரிலான ஹெச்.டி. புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.
வானவில் : எக்ஸ்மேட் லூனா புரொஜெக்டர்
Published on

முன்பெல்லாம் அலுவலகங்களில் காட்சிகள், ஆவணங்களை பெரிதுபடுத்தி திரையில் காட்டப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது வீடுகளிலும் பெரிய திரையில் காட்சிகளைப் பார்த்து ரசிக்க இத்தகைய புரொஜெக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் லூனா 2.0 எக்ஸ்மேட் புரொஜெக்டர் இரண்டு வேரியன்ட்களில் வந்துள்ளது.

வீட்டை ஹோம் தியேட்டராக மாற்றி திரைப்படங்களை பிரம்மாண்டமாக பார்த்து ரசிக்க இது உதவுகிறது. இது எல்.இ.டி. டிஸ்பிளே கொண்டது. ஏ.வி. இன்புட், டி.எப். கார்ட், யு.எஸ்.பி., ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், வி.ஜி.ஏ. போர்ட் ஆகிய இணைப்பு வசதிகளும் உள்ளன. இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். இது அளவில் சிறியதாக உள்ளதால் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதும் எளிது. இதன் எடை ஒரு கிலோ மட்டுமே. இதனால் சுற்றுலா செல்லும்போது யு.எஸ்.பி. இருந்தால் போதும். இதில் ஸ்பீக்கர்கள் இருப்பதால் வெறும் சுவற்றின் மீது கூட காட்சிகளை போகஸ் செய்து படம் பார்க்க முடியும். இதில் எக்ஸ்மேட் லூனா விலை சுமார் ரூ.5,499. லூனா 2.0 மாடல் விலை சுமார் ரூ.6,599.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com