வானவில் : ஜெப்ரானிக்ஸ் சவுண்ட் பார்

ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் இந்திய நிறுவனமான ஜெப்ரானிக்ஸ், புதிய வகையிலான ஆடியோ சாதனங்களை அதாவது சவுண்ட் பார்களை அறிமுகம் செய்துள்ளது.
வானவில் : ஜெப்ரானிக்ஸ் சவுண்ட் பார்
Published on

ஜெப்ஜூக் பார் 9000 என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது. இதன் விலை சுமார் ரூ.26,999 ஆகும். இதில் டால்பி சவுண்ட் சிஸ்டம் உள்ளது.

இதனால் தியேட்டரில் கிடைக்கும் சவுண்ட் அனுபவத்தை இதன் மூலம் வீட்டிலேயே பெறலாம். சவுண்ட் பார் வயர்லெஸ் முறையில் செயல்படக் கூடியது. இதில் பிளே பேக் வசதி உள்ளது.

இதை ஸ்மார்ட்போன் மூலம் புளூடூத் இணைப்பு வாயிலாக செயல்படுத்த முடியும். பிரீமியம் மாடல் சவுண்ட் பார் விரும்புவோரின் தேர்வாக இது நிச்சயம் இருக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com