வானவில் : சிஸ்கா பி.ஓ 511. ஜே பவர் பேங்க்

மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிஸ்கா நிறுவனம் அதிக திறன் கொண்ட பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,199 ஆகும்.
வானவில் : சிஸ்கா பி.ஓ 511. ஜே பவர் பேங்க்
Published on

அனைத்து முன்னணி விற்பனையகங்களிலும் இது கிடைக்கும். சிஸ்கா பி. ஓ 511. ஜே. என்ற பெயரில் வந்துள்ள இந்த பவர் பேங்குக்கு 6 மாத உத்தரவாதத்தையும் இந்நிறுவனம் அளிக்கிறது.

சிவப்பு, நீலம், சில்வர் நிறங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது. இது 5,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பாலிமர் செல்லை உள்ளடக்கியது. பேட்டரியின் திறனை உணர்த்தும் இன்டிகேட்டர் விளக்கும் இதில் உள்ளது.

இதில் மைக்ரோ யு.எஸ்.பி. இன்புட், யு.எஸ்.பி. அவுட்புட் ஆகியன உள்ளன. இது எடை (110 கிராம்) குறைவானதாகும். இதன் மூலம் டிஜிட்டல் கேமரா, ஐ-போன், கேமிங் கன்சோல், ஐ-பாட், எம்.பி 3 பிளேயர், டேப்லெட், புளூடூத் ஸ்பீக்கர், ஹெட்போன், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com