வானவில் : ஜியோமியின் 65 வாட் டைப் சி பவர் அடாப்டர்

ஜியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்கள் விரைவாக சார்ஜ் ஏறுவதற்கு துணை புரியும் 65 வாட் டைப் சி பவர் அடாப்டரை அறிமுகம் செய்துள்ளது. வெள்ளை நிறத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
வானவில் : ஜியோமியின் 65 வாட் டைப் சி பவர் அடாப்டர்
Published on

13 அங்குல மேக் புக் புரோ லேப்டாப் பேட்டரியை ஒரு மணி 50 நிமிடத்தில் இதன் மூலம் முழுமையாக சார்ஜ் செய்து விடலாம். அதேபோல 15.6 அங்குல மேக்புக் புரோ லேப்டாப் பேட்டரியை 2 மணி 25 நிமிடங்களில் சார்ஜ் செய்து விடலாம். அதேபோல ஐ-போன் 11 ஸ்மார்ட்போனை ஒரு மணி 50 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடலாம். ரெட்மி கே 20 புரோ மாடல் ஸ்மார்டபோனை ஒரு மணி 40 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடலாம்.

இதில் ஏ.எஸ்.யு.எஸ்., டெல், ஹெச்.பி., லெனோவா, ரேஸர், சாம்சங் உள்ளிட்ட நிறுவனத்தின் லேப்டாப்களையும் சார்ஜ் செய்யமுடியும். இதில் அதிக மின் அழுத்த வேறுபாட்டைத் தாங்கும் உணர் சென்சார் உள்ளது. இதனால் பல்வேறுபட்ட மாடல்களுக்கு உரிய மின் அழுத்தத்தை சீராக அளித்து விரைவாக சார்ஜ் ஆக உதவும். எளிதில் தீப்பிடிக்காத வகையில் இதன் மேல் பகுதி உறுதியான பிளாஸ்டிக்கால் ஆனது. இது அதிக வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டது. இது விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,400 ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com