

ஹெச்.ஆர்.டி 242.இ மற்றும் ஹெச்.ஆர்.டி 2623.இ என்ற இரண்டு மாடல்கள் வந்துள்ளன. இவை இரண்டுமே இன்வெர்ட்டர் உள்ள மாடலாகும். இதனால் மின்சாரம் சிக்கனமாக செலவாகும். இடத்தை அடைத்துக் கொள்ளாத வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்திய சமையலறைக்கு ஏற்ற வகையில் உள்பகுதியில் அதிக இடவசதி கொண்டவையாக இவை உள்ளன. உள்பகுதியில் பொருட்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் அதிக ஒளி வீசும் எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. உள்பகுதியில் எளிதில் குளிர்விக்க டி.இ.எப்.டி. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 242 லிட்டர் மற்றும் 262 லிட்டர் அளவுகளில் இது வெளிவந்துள்ளது.