வானவில் : அதிக திறன் கொண்ட ‘எஸ்1003’ பவர் பேங்க்

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் பிரபலமாகத் திகழும் ஹாங்காங்கைச் சேர்ந்த சவுண்டு ஒன் நிறுவனம் சிறிய ரக, அதேசமயம் அதிக திறன் மிக்க பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.
வானவில் : அதிக திறன் கொண்ட ‘எஸ்1003’ பவர் பேங்க்
Published on

எஸ்1003 என்ற பெயரில் வந்துள்ள இந்த பவர் பேங்க் 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்டது. மின்சாரத்தை சேமித்து வைக்கும் வகையில் லித்தியம் பாலிமர் பேட்டரி இதில் உள்ளது.

இதனால் சேமிக்கப்படும் மின்திறனில் 80 சதவீதம் வரை மின்னணு பொருட்களான ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்டவற்றுக்கு கடத்தும். இதன் விலை ரூ.999. அளவில் சிறியதாக உள்ள இந்த பவர் பேங்கின் எடை 175 கிராம் மட்டுமே. கிரெடிட் கார்டு கவரைப் போல அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே சமயத்தில் 2 மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய வசதியாக 2 யு.எஸ்.பி. போர்ட்கள் உள்ளன.

ஒரு மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் வசதி உள்ளது. இந்த பவர் பேங்க் சார்ஜ் ஆக 6 மணி நேரம் ஆகும். பவர் பேங்கில் எந்த அளவுக்கு மின்சாரம் உள்ளது என்பதை உணர்த்தும் இன்டிகேட்டர் விளக்கும் உள்ளது.

இது 6 அடுக்கு பாதுகாப்பு வளையம் கொண்டது. அதாவது ஷார்ட் சர்க்யூட், கரன்ட் ஓவர்லோட், வோல்டேஜ் ஓவர்லோட், அதிக வெப்பமடைவது உள்ளிட்டவற்றை தடுக்கும். இதன் மூலம் எத்தகைய மின்னணு கருவியையும் சார்ஜ் செய்ய முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com