

பார்ப்பதற்கு அழகிய தோற்றம், வடிவமைப்பு கொண்டதாக உள்ள இந்த ஸ்பீக்கரின் விலை சுமார் ரூ.1,499 ஆகும்.
இதில் ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ட் தொழில்நுட்பம் உள்ளதால், நீச்சல் குளம், நீர் வீழ்ச்சி அருகிலும் இதை வைக்கலாம். இதனால் பாதிப்பு ஏற்படாது. இதில் புளூடூத் 4.1 இணைப்பு உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலமும் இதில் பாடல்களை கேட்கலாம். பிற மின் சாதனங்களை ஏ.யு.எக்ஸ். மூலம் இணைத்து இசையை கேட்டு மகிழலாம். இதில் பண்பலை (எப்.எம்.) வானொலி வசதியும் உள்ளது. இதில் 1,200 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட லித்தியம் பேட்டரி உள்ளது. இது 8 மணி நேரம் செயல்பட உதவுகிறது. மஞ்சள், கருப்பு, கிரே, டூடில் கிரே, சிவப்பு உள்ளிட்ட 5 கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது.