வானவில் : லாஜிடெக் 3 இன் 1 வயர்லெஸ் சார்ஜர்

மின்னணு பாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் லாஜிடெக் நிறுவனம் தற்போது மூன்று பணிகளை நிறைவேற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வானவில் : லாஜிடெக் 3 இன் 1 வயர்லெஸ் சார்ஜர்
Published on

ஐ-போன், ஆப்பிள் கடிகாரம், ஏர்பாட் உள்ளிட்ட மூன்றையும் ஒரே சார்ஜிங் ஸ்டேஷனில் இதன் மூலம் சார்ஜ் செய்ய முடியும். இதில் இரண்டு வயர்லெஸ் சார்ஜிங் பகுதிகளும் ஒரு வயர் இணைப்பு சார்ஜிங் வசதியும் கொண்டது. வயர் பகுதியில் ஸ்மார்ட்போனையும், வயர்லெஸ் பகுதியில் ஏர்பாட் மற்றும் ஸ்மார்ட் கடிகாரத்தை சார்ஜ் செய்து கொள்ளலாம். வயர்லெஸ் சார்ஜிங் பகுதியானது கியூ-ஐ சார்ஜிங் தரத்திலானவை.

இதில் கேலக்ஸி எஸ் 20 உள்ளிட்டவற்றையும் சார்ஜ் செய்ய முடியும். இதன் விலை சுமார் ரூ.9,250. இத்துடன் தனியாக வயர்லெஸ் சார்ஜிங் சாதனத்தையும் வெளியிட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.4,250. இது தவிர டேபிளில் வைக்கும் தட்டையான வயர்லெஸ் சார்ஜிங் பேடையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை சுமார் ரூ.2,750. இவை அனைத்துமே ஆப்பிள் சாதனங்களை சார்ஜ் செய்ய ஏற்றவை. அதற்கேற்ப 7.5 வாட் திறன் கொண்டவை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com