வானவில்: பி.எஸ்.6 தரத்தில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300

ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்திய நிறுவனமாகத் திகழும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எஸ்.யு.வி. தயாரிப்பில் முன்னணியில் விளங்குகிறது. இந்நிறுவனத்தின் பிரபலமான மாடல்களில் எக்ஸ்.யு.வி.300 மாடல் காரும் ஒன்றாகும்.
வானவில்: பி.எஸ்.6 தரத்தில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300
Published on

தற்போது பாரத் புகைவிதி 6 சோதனை விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மாடல் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.8.30 லட்சமாகும். இதில் பிரீமியம் மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.11.84 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பி.எஸ். 4 தர மாடலைக் காட்டிலும் புதிய மாடலின் விலை ரூ.20 ஆயிரம் அதிகமாகும்.

பி.எஸ்.6 தரத்திலான வாகன அறிமுகத்தில் முதல் கட்டமாக எக்ஸ்.யு.வி.300 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டதாக வந்துள்ளது. இது 110 ஹெச்.பி. திறனையும் 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடல் எஸ்.யு.வி. கார் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யு, போர்டு எகோ ஸ்போர்ட், டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி விடாரா ஆகிய மாடல் கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com