வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தியின் மறுபக்கம்

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்து யூ-டியூப் பிரபலமாக மாறி இருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தி, பயணம் மற்றும் உணவுகள் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை விவரித்துக் கொண்டிருக்கிறார்.
வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தியின் மறுபக்கம்
Published on

கொரோனா பலரையும் புதிய அவதாரம் எடுக்க வைத்துள்ளது. அந்தப் பட்டியலில் ஆஷிஷ் வித்யார்த்தியும் ஒருவர். சமீபத்தில் சக்லேஷ்பூரிலிருந்து பெங்களூருவுக்கு பயணித்த அவர், அங்கு தான் கண்ட வாழ்க்கையின் உத்வேகத்தைப் பகிர்ந்துள்ளார். அவரது வீடியோக்களுக்கு வரும் கமெண்டுகளை பார்க்கும் போது, இளம் யூ-டியூபர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் புது கண்ணோட்டத்துடன் ஆஷிஷ் பார்க்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் யூ-டியூபராக அவர் உருவாகியுள்ளார்.

* தன்னம்பிக்கை பேச்சாளர்

தமிழில் விஜய் நடித்த கில்லி, விக்ரம் நடித்த சாமி உள்ளிட்ட 11 மொழிகளில் ஆஷிஷ் நடித்துள்ளார். இது தவிர, தன்னம்பிக்கை பேச்சாளராகவும் இருக்கிறார். இது குறித்து ஆஷிஷ் கூறும்போது, 56 வயதில் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறேன். தன் போக்கிலேயே வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். நான் சந்திக்கும் மனிதர்களிடம் என் வாழ்க்கைக் கதையைச் சொல்ல விரும்புகிறேன். நம்மைச் சுற்றிலும் உள்ள சாதாரண விஷயங்களை நாம் கண்டுகொள்வதில்லை. சாதாரண விஷயங்களில் மிகப் பெரிய விஷயங்கள் புதைந்திருப்பதை கண்டுபிடித்தேன்.

* பயணத்தின் மூலம் அனுபவம்

முன்பெல்லாம் பயணத்தை ஒரு வேலையாக பார்த்தேன். பயணத்திற்கான காரணங்களை இப்போது கண்டுபிடித்தபின் சுவாரசி யமாக இருக்கிறது. குறைந்தது 4 நாட்களுக்கு ஒருமுறை புதிய இடத்துக்குச் செல்ல விரும்புகிறேன். சென்னையைப் பொறுத்தவரை, உள்ளூர் சுற்றுலா எனக்கு மிகவும் பிடிக்கும். புதிதாக எதையாவது செய்ய முயல்கிறேன். அவற்றில் சில வேடிக்கையாகவும், பலனளிப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. அதில் ஒன்று தான் சமையல்.

* சமையலும் சிறந்த கலைதான்

சென்னைக்கு முதன்முதலில் சென்றபோது, அங்குள்ள உணவகம் ஒன்றில் சுவையான சிக்கன் 65-ஐ தேடிக் கண்டுபிடித்தேன். தமிழ்நாட்டில் தோசையைப் புரட்டிப் போடுவதும், காபியை ஆற்றுவதும் தனிக்கலை என்றே கருதுகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com