விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: 20 வகையான கொழுக்கட்டை செய்முறை!

நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் ஸ்பெஷலாக 20 வகையான கொழுக்கட்டை வகைகள் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: 20 வகையான கொழுக்கட்டை செய்முறை!
Published on

ஒவ்வொரு வாரமும் சண்டே ஸ்பெஷல், பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் சுவையான சைவ, அசைவ உணவு வகைகள் செய்முறை குறித்து பார்த்து வருகிறோம். இந்த வாரம், விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக 20 வகையான கொழுக்கட்டை வகைகள் செய்வது எப்படி என்பதை பார்க்கப்போகிறோம்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: 20 வகையான கொழுக்கட்டை செய்முறை!

1.வெல்லப் பூரண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

வெல்லம் - ¾ கப்

தேங்காய் துருவல் - ½ கப்

ஏலக்காய் - 2 (பொடியாக்கியது)

நெய் - 1 டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை

முதலில் கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைக்கவும். அதில் வெல்லத்தை உடைத்து போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்க்கவும். அடுப்பில் தீயை மிதமாக வைத்துக்கொள்ளவும். வெல்லப்பாகு கெட்டியாகத் தொடங்கும்போது, அதில் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறவும். நன்கு கெட்டியானதும், அடுப்பை விட்டு இறக்கி ஆறவைத்தால் பூரணம் ரெடி.

அடுத்து, அரிசி மாவில் உப்பு சேர்த்து, கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றி மென்மையாக பிசையவும். பூரி - சப்பாத்திக்கு செய்யும் உருண்டை போல் அரிசி மாவை உருட்டி, அதை கையில் வைத்து தோசை போல் தட்டி, அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை சிறிதளவு வைத்து, அப்படியே மூடவும். பின்னர், இட்லி தட்டுகளில் கொழுக்கட்டைகளை அடுக்கிவைத்து, 15 நிமிடங்கள் மிதமான ஆவியில் வேகவிடவும். சுவையான வெல்லப்பூரண கொழுக்கட்டை தயார்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: 20 வகையான கொழுக்கட்டை செய்முறை!

2.மிளகு கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - ¼ கப்

உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

முதலில், கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் மிளகு, சீரகத்தை போட்டு லேசாக வறுக்கவும். பின்னர், அதை மிக்சி ஜாரில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும். அதை தேங்காய் துருவலுடன் சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளவும்.

பின்னர், அரிசி மாவுடன் சேர்த்து சூடான வெந்நீர் ஊற்றி பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும். அதை இட்லி தட்டுகளில் அடுக்கிவைத்து, ஆவியில் 15 நிமிடங்கள் வேகவிட்டால் சுவையான மிளகு கொழுக்கட்டை ரெடி.

3.வாழைப்பழ கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

பழுத்த வாழைப்பழம் - 2

வெல்லம் - ½ கப்

தேங்காய் துருவல் - ¼ கப்

ஏலக்காய் - 2

செய்முறை

முதலில், வாழைப்பழத்தை நன்றாக மசித்து, அத்துடன் பொடியாக்கிய வெல்லம், தேங்காய் துருவல், பொடியாக்கிய ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்கவும். அடுத்து, அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக பிடிக்கவும். அதை இட்லி சட்டியில் அடுக்கி வைத்து, ஆவியில் வேகவிடவும். சுவையான வாழைப்பழ கொழுக்கட்டை ரெடி.

4.பாசிப்பருப்பு காரக் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

பாசிப்பருப்பு - ½ கப்

தேங்காய் துருவல் - ¼ கப்

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில், கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் குக்கரை வைத்து பாசிப்பருப்பை போட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி, 3 விசில் வரும் வரை குலைய வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன், தேங்காய் துருவல், அரைத்து வைத்த பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கெட்டியாக வைத்துக் கொள்ளவும்.

அடுத்து, அரிசி மாவுடன் சூடான வெந்நீர் சேர்த்து மென்மையாக பிசைந்து, அதை உருண்டையாக பிடித்து கையில் வைத்து தட்டி, அதன் நடுவே ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள கலவை சிறிதளவு வைத்து மூடி, இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிட்டால் சுவையான பாசிப்பருப்பு காரக் கொழுக்கட்டை தயார்.

5.தேங்காய் பூரண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

வெல்லம் - ¾ கப்

ஏலக்காய் - 2 (பொடியாக்கியது)

செய்முறை

முதலில், கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, தேங்காய் துருவல் மற்றும் பொடியாக்கிய வெல்லத்தை சேர்த்து ஈரம் போகும் வரை கிளறவும். பொடியாக்கிய ஏலக்காயை தூவி, பிசைந்து பூரணம் தயார் செய்யவும்.

அடுத்து, அரிசி மாவுடன் சூடான வெந்நீர் சேர்த்து மென்மையாக பிசைந்து, அதை உருண்டையாக பிடித்து கையில் வைத்து தட்டி, அதன் நடுவே ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி, இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிட்டால் சுவையான தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெடி.

6.கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

கடலைப்பருப்பு - ½ கப்

வெல்லம் - ¾ கப்

தேங்காய் துருவல் - ¼ கப்

செய்முறை

முதலில், கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் குக்கரை வைத்து கடலைப்பருப்பை போட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி, 3 விசில் வரும் வரை குலைய வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் பொடியாக்கிய வெல்லம், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து பூரணம் தயார் செய்யவும்.

அடுத்து, அரிசி மாவுடன் சூடான வெந்நீர் சேர்த்து மென்மையாக பிசைந்து, அதை உருண்டையாக பிடித்து கையில் வைத்து தட்டி, அதன் நடுவே ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி, இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிட்டால் சுவையான கடலை பருப்பு கொழுக்கட்டை தயார்.

7.கருப்பட்டி பூரண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

கருப்பட்டி - ¾ கப்

தேங்காய் துருவல் - ½ கப்

ஏலக்காய் - 2

செய்முறை

முதலில், வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கருப்பட்டியை சிறிய துண்டுகளாக உடைத்துபோட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்க்கவும். பாகு கெட்டியாக தொடங்கும்போது, தேங்காய் துருவல், பொடியாக்கிய ஏலக்காயை தூவி பூரணம் தயார் செய்யவும்.

அடுத்து, அரிசி மாவுடன் சூடான வெந்நீர் சேர்த்து மென்மையாக பிசைந்து, அதை உருண்டையாக பிடித்து கையில் வைத்து தட்டி, அதன் நடுவே ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி, இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிட்டால் சுவையான கருப்பட்டி பூரண கொழுக்கட்டை ரெடி.

8.அவல் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அவல் - 1 கப்

அரிசி மாவு - ½ கப்

தேங்காய் துருவல் - ¼ கப்

வெல்லம் - ½ கப்

செய்முறை

முதலில், அவலில் சூடான வெந்நீரை ஊற்றி பிசையவும். அத்துடன், அரிசி மாவு, தேங்காய் துருவல், பொடியாக்கிய வெல்லம் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து, இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவைத்தால், சுவையான அவல் கொழுக்கட்டை தயார்.

9.பாசிப்பயறு இனிப்பு பூரண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

பாசிப்பயறு - ½ கப்

அரிசி மாவு - 1 கப்

வெல்லம் - ¾ கப்

தேங்காய் துருவல் - ¼ கப்

செய்முறை

முதலில், கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் குக்கரை வைத்து பாசிப்பருப்பை போட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி, 3 விசில் வரும் வரை குலைய வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர், அத்துடன் பொடியாக்கிய வெல்லம், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து பூரணம் தயார் செய்யவும்.

அடுத்து, அரிசி மாவுடன் சூடான வெந்நீர் சேர்த்து மென்மையாக பிசைந்து, அதை உருண்டையாக பிடித்து கையில் வைத்து தட்டி, அதன் நடுவே ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி, இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிட்டால் சுவையான பாசிப்பயறு இனிப்பு பூரண கொழுக்கட்டை ரெடி.

10.பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

பால் - 2 கப்

சர்க்கரை - ½ கப்

தேங்காய் பால் - ½ கப்

ஏலக்காய் - 3

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை

முதலில், அரிசி மாவில் உப்பு சேர்த்து, அத்துடன் சூடான வெந்நீர் சேர்த்து மென்மையான பதத்தில் பிசையவும். பின்னர் அந்த மாவை கோலிக்குண்டு அளவில் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அதை ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி, அத்துடன் சர்க்கரை, ஏலக்காய் பொடியை சேர்க்கவும். அதில் வேகவைத்த கொழுக்கட்டைகளை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு, நிறைவாக தேங்காய் பாலை ஊற்றினால் சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

11.முந்திரி பூரண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

முந்திரி - ½ கப்

தேங்காய் துருவல் - ¼ கப்

வெல்லம் - ½ கப்

செய்முறை

முதலில், கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் வெல்லத்தை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்க்கவும். பாகு பதத்திற்கு வந்ததும் அத்துடன் தேங்காய் துருவல், சிறு சிறு துண்டுகளாக வெட்டிய முந்திரியை சேர்த்து பூரணம் தயாரிக்கவும்.

அடுத்து, அரிசி மாவுடன் சூடான வெந்நீர் சேர்த்து மென்மையாக பிசைந்து, அதை உருண்டையாக பிடித்து கையில் வைத்து தட்டி, அதன் நடுவே ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி, இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிட்டால் சுவையான முந்திரி பூரண கொழுக்கட்டை ரெடி.

12.முந்திரி - திராட்சை பூரண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

முந்திரி - ¼ கப்

உலர் திராட்சை - ¼ கப்

வெல்லம் - ½ கப்

தேங்காய் துருவல் - ¼ கப்

செய்முறை

முதலில், கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் வெல்லத்தை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்க்கவும். பாகு பதத்திற்கு வந்ததும் அத்துடன் தேங்காய் துருவல், உடைத்த முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து கிளறி பூரணம் தயார் செய்யவும்.

அடுத்து, அரிசி மாவுடன் சூடான வெந்நீர் சேர்த்து மென்மையாக பிசைந்து, அதை உருண்டையாக பிடித்து கையில் வைத்து தட்டி, அதன் நடுவே ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி, இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிட்டால் சுவையான முந்திரி - திராட்சை பூரண கொழுக்கட்டை தயார்.

13.பனங்கற்கண்டு பூரண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

பனங்கற்கண்டு - ¾ கப்

தேங்காய் துருவல் - ½ கப்

ஏலக்காய் - 3

செய்முறை

முதலில், கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் பனங்கற்கண்டை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்க்கவும். பாகு பதத்திற்கு வந்ததும் அத்துடன் தேங்காய் துருவல், பொடியாக்கிய ஏலக்காய் சேர்த்து பூரணம் செய்யவும்.

அடுத்து, அரிசி மாவுடன் சூடான வெந்நீர் சேர்த்து மென்மையாக பிசைந்து, அதை உருண்டையாக பிடித்து கையில் வைத்து தட்டி, அதன் நடுவே ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி, இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிட்டால் சுவையான பனங்கற்கண்டு பூரண கொழுக்கட்டை ரெடி.

14.தேங்காய் பருப்பு காரக் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 1 கப்

கடலைப்பருப்பு – ½ கப்

தேங்காய் – ¼ கப்

பச்சை மிளகாய் – 2

செய்முறை

முதலில், கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் குக்கரை வைத்து, அதனுள் கடலைப்பருப்பை போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி 3 விசில் வரும்வரை குலைய வேகவிடவும். பின்னர், அதனுடன் தேங்காய் துருவல், அரைத்து வைத்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பிசையவும்.

அடுத்து, அரிசி மாவுடன் சூடான வெந்நீர் சேர்த்து மென்மையாக பிசைந்து, அதை உருண்டையாக பிடித்து கையில் வைத்து தட்டி, அதன் நடுவே ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள கலவையை சிறிதளவு வைத்து மூடி, இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிட்டால் சுவையான தேங்காய் பருப்பு காரக் கொழுக்கட்டை தயார்.

15.ஏலக்காய் பூரண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

சர்க்கரை - ½ கப்

தேங்காய் துருவல் - ½ கப்

ஏலக்காய் - 3

செய்முறை

முதலில், கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் சர்க்கரையை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்க்கவும். பாகு பதத்திற்கு வந்ததும் அத்துடன் தேங்காய் துருவல், பொடியாக்கிய ஏலக்காய் சேர்த்து பூரணம் செய்யவும்.

அடுத்து, அரிசி மாவுடன் சூடான வெந்நீர் சேர்த்து மென்மையாக பிசைந்து, அதை உருண்டையாக பிடித்து கையில் வைத்து தட்டி, அதன் நடுவே ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி, இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிட்டால் சுவையான ஏலக்காய் பூரண கொழுக்கட்டை தயார்.

16.இனிப்பு ரவை கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

ரவை - ½ கப்

அரிசி மாவு - ½ கப்

வெல்லம் - ½ கப்

தேங்காய் துருவல் - ¼ கப்

செய்முறை

முதலில், கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் ரவையை தட்டி லேசாக வறுக்கவும். பின்னர், அதை அரிசி மாவுடன் சேர்த்து, பொடியாக்கிய வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவிடவும். சுவையான இனிப்பு ரவை கொழுக்கட்டை ரெடி.

17.கருப்பட்டி எள்ளு கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

எள் - ½ கப்

கருப்பட்டி - ¾ கப்

தேங்காய் துருவல் - ¼ கப்

ஏலக்காய் - 3

செய்முறை

முதலில், கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் எள்ளை போட்டு வறுத்து, பொடியாக திரித்து வைத்துக்கொள்ளவும். அடுத்து, கருப்பட்டியை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்க்கவும். பாகு பதத்திற்கு வந்ததும் அத்துடன் தேங்காய் துருவல், பொடியாக்கிய ஏலக்காய் சேர்த்து பூரணம் செய்யவும்.

அடுத்து, அரிசி மாவுடன் சூடான வெந்நீர் சேர்த்து மென்மையாக பிசைந்து, அதை உருண்டையாக பிடித்து கையில் வைத்து தட்டி, அதன் நடுவே ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி, இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிட்டால் சுவையான கருப்பட்டி எள்ளு கொழுக்கட்டை ரெடி.

18.வாழைப்பழ வெல்ல கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

வாழைப்பழம் - 2

வெல்லம் - ½ கப்

தேங்காய் துருவல் - ¼ கப்

செய்முறை

வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் பொடியாக்கிய வெல்லம், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர், அந்த கலவையை அரிசி மாவுடன் சேர்த்து, பிசைந்து உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவைக்கவும். சுவையான வாழைப்பழ வெல்ல கொழுக்கட்டை தயார்.

19.தேன் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

தேங்காய் துருவல் - ½ கப்

தேன் - ¼ கப்

ஏலக்காய் - 3

செய்முறை

அரிசி மாவுடன் சூடான வெந்நீர் சேர்த்து பிசைந்து சிறிய கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவிடவும். பின்னர், அதன் மீது தேன் ஊற்றி, தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடியை தூவினால், ருசியான தேன் கொழுக்கட்டை ரெடி.

20.நெய் - தேங்காய் பூரண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

தேங்காய் துருவல் - ½ கப்

வெல்லம் - ½ கப்

நெய் - 1 டீஸ்பூன்

ஏலக்காய் - 3

செய்முறை

முதலில், கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் வெல்லத்தை உடைத்து போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்க்கவும். பாகு பதத்திற்கு வந்ததும் அத்துடன் தேங்காய் துருவல், பொடியாக்கிய ஏலக்காய், நெய் சேர்த்து பூரணம் செய்யவும்.

அடுத்து, அரிசி மாவுடன் சூடான வெந்நீர் சேர்த்து மென்மையாக பிசைந்து, அதை உருண்டையாக பிடித்து கையில் வைத்து தட்டி, அதன் நடுவே ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி, இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிட்டால் சுவையான நெய் - தேங்காய் பூரண கொழுக்கட்டை தயார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com