ராஜ நாகத்தின் மீது தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டிய மனிதர்! வைரல் வீடியோ

இந்த வீடியோவை பார்த்து பலர் ஆச்சரியமடைந்துள்ளனர்.
ராஜ நாகத்தின் மீது தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டிய மனிதர்! வைரல் வீடியோ
Published on

மும்பை,

ராஜ நாகம் பாம்பு வகைகளில் அதிக விஷத்தன்மை கொண்டவையாகும். இந்து மதத்தினர் நாகப்பாம்பை கண்டால் தெய்வமாக எண்ணி வணங்கி வருகிறார்கள். இந்த பழக்கம் பண்டைய காலம் முதலே இருந்து வருகிறது.

இந்த நிலையில், பாம்புக்கு தண்ணீரால் அபிஷேகம் செய்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்திய வனச்சரக அதிகாரி(ஐ எப் எஸ்) ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து பலர் ஆச்சரியமடைந்துள்ளனர்.

அந்த வீடியோவில், ஒரு மனிதர் தன் வீட்டின் தோட்டத்தில் வந்த ராஜ நாகம் ஒன்றின்மீது, வாளியில் தண்ணீர் கொண்டுவந்து அதன்மீது ஊற்றி தண்ணீர் அபிஷேகம் நிகழ்த்தியுள்ளார். அந்த பாம்பு அவரை ஒன்றும் செய்யாமல் தண்ணீரில் நனைந்தபடி இருந்தது.

பழைய  வீடியோவாக இருந்தாலும் இப்போது மீண்டும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அவர் பதிவிட்டுள்ளதாவது,  இது வெயில்காலம். யார்தான் தண்ணீரில் குளிப்பதை விரும்பமாட்டார்கள். ஆனால் இது ஆபத்தானது. தயவுசெய்து  யாரும் இதுபோன்று முயற்சி செய்யாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com