பார்வையாளர்கள் முன்னிலையில் ராஜநாகத்தை முத்தமிட்டு கொஞ்சும் மனிதர்! வைரலாகும் வீடியோ

பார்வையாளர்கள் முன்னிலையில் ராஜநாகத்தின் தலையில் அவர் முத்தமிடுவது அனைவரையும் பயம் கலந்த ஆச்சரியத்தில் உறைய வைத்தது.
பார்வையாளர்கள் முன்னிலையில் ராஜநாகத்தை முத்தமிட்டு கொஞ்சும் மனிதர்! வைரலாகும் வீடியோ
Published on

ஜகார்தா,

உலகில் உள்ள விஷப்பாம்புகளில் ஒன்றான ராஜநாகம், மனிதனை கடித்த 15 நிமிடங்களில் மனிதனை கொன்றுவிடும். ராஜநாகத்தின் விஷத்தின் ஒரு சிறிய அளவு கூட நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கும் என்பதால், ஒரு நபரை முடக்குவாதத்திற்கு அனுப்பும்.

பிரையன் பார்சிக், என்ற நபர் பாம்புகள் மற்றும் முதலைகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர். அவர் தனது ஸ்நேக்பைட்ஸ்டிவி என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஒரு ராஜநாகத்தை முத்தமிடுகிறார்.

பாம்பு தன்னை கடிக்காதவாறு அதன் பின்பக்க தலையில் முத்தமிடுகிறார்.இந்தோனேஷியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பார்வையாளர்கள் முன்னிலையில் ராஜநாகத்தின் தலையில் அவர் முத்தமிடுவது அனைவரையும் பயம் கலந்த ஆச்சரியத்தில் உறைய வைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com