

மும்பை,
ஒரு அழகான பூனைக்குட்டியை பார்த்த மறுநொடியே குரங்கிற்கு அதன் மீது காதல் மலர்ந்துள்ளது.குரங்குகள் மனிதர்களிடம் மட்டுமல்ல, மற்ற விலங்குகளிடமும் அன்பான உயிரினங்கள் என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணமாக உள்ளது..
நாய்கள் குரங்குகளை அதிகம் விரும்புவதில்லை என்றாலும், காட்டு குரங்குகளுடன் நட்பு கொள்வதில் பூனைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு, 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். அந்த வீடியோவில் ஒரு பெண்ணிடம் உள்ள செல்லபிராணியான பூனைக்குட்டியை, ஒரு குரங்கு பார்க்கிறது. பின் அதன் அருகே சென்று அந்த பூனையை தன் கையால் தொட்டுப்பார்த்து முத்தம் கொடுத்துவிட்டு செல்கிறது.
இந்த வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.