

மும்பை,
சமீபத்தில், ஒரு வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், இசை நிகழ்ச்சி ஒன்றை காண்பதற்காக பார்வையாளர்கள் இசைக் குழுவினரை சுற்றி அமர்ந்திருந்தனர். பச்சை நிற புடவை அணிந்த பெண் ஒருவர், கையில் மைக் உடன் பாடுவதற்கு தயாராக இருந்தார்.
பார்வையாளர்கள் நிகழ்ச்சியை ஆவலுடன் காண்பதற்காக காத்திருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பின்னனியில் பாடல் ஒன்று ஒலிபரப்பு செய்யப்பட்டதால், உடனே அவர் தன்னை மறந்து ஆட ஆரம்பித்தார். அதுவும் சாதாரண ஆட்டம் அல்ல, பேயாட்டம்.
பார்வையாளர்களை நோக்கி குதித்து தாவி படுத்து சறுக்கி இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தி, அவர் போட்ட ஆட்டத்தில், அங்கிருந்த அனைவரும் செய்வதறியாது திகைத்து போய் நின்றனர்.
அந்த பெண் பேய் பிடித்தவர் போல ஆடி, பார்வையாளர்களை ஒரு நிமிடம் அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைய வைத்தார். பின்னர் சிரிப்பையும் வரச் செய்துள்ளார்.
இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதனை பார்த்தால் நிச்சயம் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாது.