விவோ வி 25 புரோ

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் விவோ நிறுவனம் புதிதாக வி 25 புரோ என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது.
விவோ வி 25 புரோ
Published on

செல்பி பிரியர்களுக்கென முன்புறம் 32 மெகா பிக்ஸெல் ஆட்டோ கேமராவைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.35,999. இது 6.56 அங்குல முழு ஹெச்.டி. அமோலெட் திரையைக் கொண்டது.

இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம்கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. 4830 எம்.ஏ.ஹெச். திரையைக் கொண்ட 66 வாட் விரைவாக சார்ஜ் ஆகும் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com