விவோ ஒய் 56 5-ஜி ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் ஒய் 56 என்ற பெயரிலான 5-ஜி மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
விவோ ஒய் 56 5-ஜி ஸ்மார்ட்போன்
Published on

இது 6.58 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் உள்ளது. இவை 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டவை. இதனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உடையது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com