

வோல்வோ மாடல் கார்களில் அதிக விலையுள்ள மாடல் வரிசையில் இது இரண்டாவது ஆகும். இதில் 408 ஹெச்.பி. திறன் கொண்ட மோட்டார் மற்றும் 78 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 418 கி.மீ. வரை பயணிக்க முடியும்.
இதில் உள்ள பேட்டரியின் 80 சதவீதம் சார்ஜ் ஆக 40 நிமிடம் போதுமானது. இதை ஸ்டார்ட் செய்து 4.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கி.மீ. ஆகும். எல்.இ.டி. முகப்பு விளக்கு, 19 அங்குல அலாய் சக்கரம், திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, 12 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட வசதிகள் கொண்டது. வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பேட்டரியில் செயல்படும் வகையிலான டிரைவர் இருக்கை ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். பயணிகள் இருக்கையையும் இவ்விதம் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளது.