காடுகளை பாதுகாப்போம்

காடுகளைப் பாதுகாக்க அரசும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அரும்பாடுபட்டு வருகின்றன. காடுகளினால் கிடைக்கும் நன்மைகள் பல.
காடுகளை பாதுகாப்போம்
Published on

காடுகளே நாட்டின் அரணாக விளங்குகின்றன என்று சான்றோர் கள் கூறுவர். காடுகளைப் பாதுகாக்க அரசும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அரும்பாடுபட்டு வருகின்றன. காடுகளினால் கிடைக்கும் நன்மைகள் பல. அவற்றை நாம் அறிந்து கொள்வது அவசியம். காடுகளே மழை பெய்வதற்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. மரங்கள் நிறைந்த காடுகளே மேகங்களைக் குளிர்வித்து, மழையைப் பொழியச் செய்கின்றன.மழை இல்லையென் றால் வளம் இல்லை. மழை பெய்யாவிட்டால், நாட்டில் வறட்சி ஏற்படும்; விவசாயம் செய்ய முடியாது. பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினியால் வாடுவர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். பல அரிய மூலிகைகளின் பொக்கிஷமாகவும் காடுகள் திகழ்கின்றன. யாராலும் பராமரிக்கப்படாமல், தானாகவே செழித்து வரும் காடுகளை நாம் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். தேவை யின்றி மரங்களை வெட்டக் கூடாது. நம்மால் முடிந்த அளவு மரங்களை நட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com