அன்றாட மின் உபகரண பயன்பாட்டில் கவனிக்க வேண்டியவை என்னென்ன...?

எச்சரிக்கை அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது.
அன்றாட மின் உபகரண பயன்பாட்டில் கவனிக்க வேண்டியவை என்னென்ன...?
Published on

சென்னை,

எதிர்பாராத சிக்கல்

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் மின்சார உபகரணங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களை இல்லத்தரசிகள் கவனமாக பார்த்து தகுந்த தீர்வுகளை உடனுக்குடன் மேற்கொள்வது அவசியம். இல்லாவிட்டால் எதிர்பாராத சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கலாம்.

வீட்டில் தென்படும் மின் உபகரணங்கள் தரும் எச்சரிக்கை அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது; ஏனெனில் இவை வயரிங் அல்லது மின்சுற்றுகளில் உள்ள கடுமையான சிக்கல்களைக் குறிக்கலாம். விளக்குகள் விட்டு விட்டு எரிவது அல்லது மங்குவது, தளர்வான வயரிங், அதிகப்படியான மின் சுமை அல்லது சீரற்ற மின்னழுத்தத்தைக் குறிக்கும்.

தீ விபத்து

சர்க்யூட் பிரேக்கர் பாதிப்பால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவது, உங்கள் வீட்டின் மின்சார அமைப்பு அதிகப்படியான மின்சுமையைத் தாங்க முடியாமல் திணறுவதைக் காட்டுகிறது. எரிந்த வாசனை இருப்பது சுவிட்ச் போர்டுகள் அல்லது பிளக் பாயிண்டுகளுக்கு அருகில் எரிந்த வாசனை அல்லது கருகிய அடையாளங்கள் இருந்தால், கம்பிகள் அதிக வெப்பமடைந்து தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று அர்த்தம்.

வெப்பம் அல்லது சத்தம் ஏற்படுவது என்றால் மின் இணைப்புகள் சூடாக இருந்தாலோ அல்லது அங்கிருந்து ஒருவித ரீங்கா ரச் சத்தம் வந்தாலோ, அங்கு இணைப்புகள் சரியில்லை அல்லது வயரிங் சேதமடைந்துள்ளது என அறியலாம். மின் அதிர்ச்சி ஏற்படுவது என்பது பிளக் போடும்போது பொறி பறப்பதோ அல்லது சாதனங்களைத் தொடும்போது லேசாக மின்சாரம் தாக்குவதோ மிக முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையாகும்.

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக ஒரு தகுதியான மின் பணியாளரை அழைத்துச் சோதிப்பது அவசியம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com