

பயணம் செய்வது பலருக்கும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகும். அப்படி பயணம் அதிகளவில் விரும்பப்படும் போக்குவரத்து முறைகளில் ரெயில் பயணம் முக்கியமானதாகும். எத்தனை அதிகம் தூரமாயினும் வசதியாகவும், அதிகம் களைப்பில்லாமல் பயணிப்பதற்கு ரெயில் பயணமே சிறந்தது. இந்திய ரெயில்வே, 18 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, உலகின் நான்காவது பெரிய ரெயில்வே நெட்வொர்காக விளங்குகிறது.
இப்படியாக ஒருபுறம் புல்லட் ரெயில்களில் இருந்து பல அதிவேக ரெயில்களுக்கு நாடுகள் மாற்றம் காணும் நிலையில், மறுபுறம் உலகில் இன்னும் சில நாடுகளில் ரெயில்கள் ஓடாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. சில நாடுகளில் ரெயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், அதை முழுமைப்படுத்த முடியவில்லை. அப்படிப்பட்ட சில நாடுகளை பற்றி தெரிந்து கொள்வோமா?
தெற்காசியாவின் மிகச் சிறிய நாடாகவும், இந்தியாவின் அண்டை நாடாகவும் அறியப்படும் பூட்டானுக்கு ரெயில் சேவை இல்லை. ஆனால் இந்தியா, இந்தியன் ரெயில்வேயுடன் இணைக்க திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. நேபாளத்தில் உள்ள டோரி பாரியை, மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாராவுடன் இணைக்கும் திட்டமாகும். இந்த பாதையானது பூடான் வழியாகவே செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் அன்டோரா உலகின் 11-வது சிறிய நாடாகும். இங்கு மக்கள் தொகை குறைவாக இருப்பதால், ரெயில் பாதை அமைக்கப்படவில்லை. இங்கு ரெயில் சேவை இல்லாத காரணத்தால், ரெயிலில் பயணிக்க விரும்புவோர் அருகிலுள்ள பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வேண்டும். அதற்காகவே பிரத்தியேகமாக பேருந்து சேவையும் இயக்கப்படுகிறது.
ரெயில் சேவை கொண்டிருந்த வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில், உள்நாட்டில் நடந்த போரின் காரணமாக ரெயில் சேவையானது நிறுத்தப்பட்டது. 1965-ம் ஆண்டு முதல் ரெயில் இயங்கவில்லை. ஆனால் 2001-ம் ஆண்டு ராஸ் அஜ்திர் மற்றும் சிர்தேவை இணைக்கும் சில ரெயில் பாதைகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் திட்டமிட்டபடி பணியை முடிக்கமுடியவிலை.
இந்த நாட்டில் 1905-ம் ஆண்டு முதல் 1951-ம் ஆண்டு வரை ரெயில் சேவை இருந்தபோதிலும், சில பொருளாதார காரணங்களுக்காக 1974-ம் ஆண்டு மூடப்பட்டது.
பல எண்ணேய் வளங்களை கொண்டுள்ள குவைத்தில் ரெயில் சேவைகள் இல்லை. ஆனால் இங்கு சில ரெயில்வே திட்டங்கள் செயல்படுத்தபடவுள்ளன. இந்த ரெயில் பாதைகள் நகரத்தை ஒமனுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த பட்டியலில் கிழக்கு திமோரும் இணைகிறது. இன்று வரை இங்கு ரெயில் வசதிகள் உருவாக்கப்படவில்லை. இவர்களின் முதன்மையான போக்குவரத்து அமைப்பு சாலைகள் மட்டுமே. இங்கு வசிப்பவர்கள் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலமே தங்கள் பயணத்தை தொடர்கின்றனர்.