ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது: வெள்ளையா? பழுப்பு நிற முட்டையா?

வெள்ளை நிற முட்டை, பழுப்பு நிற முட்டை இதில் எந்த முட்டையை உட்கொள்வது ஆரோக்கியமானது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
வெள்ளையா? பழுப்பு நிற முட்டையா?
Published on: 

ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது: வெள்ளையா? பழுப்பு நிற முட்டையா?

புரதச்சத்து, நல்ல கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் என உடலுக்கு தேவையான பல் வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருளாக முட்டை விளங்குகிறது. வெள்ளை நிற முட்டை, பழுப்பு நிற முட்டை இதில் எந்த முட்டையை உட்கொள்வது ஆரோக்கியமானது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தினமும் சாப்பிட எது சிறந்தது என்று பார்ப்போம்.

ஊட்டச்சத்தில் வித்தியாசம் உள்ளதா?

வெள்ளை மற்றும் பழுப்பு நிற முட்டைகள் இரண்டிலும் புரதச்சத்து, நல்ல கொழுப்பு, வைட் டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றின் அளவு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். எனவே, முட்டை ஓட்டின் நிறத்தை வைத்து ஒரு முட்டை மற்றொன்றை விட ஆரோக்கியமா னது என்று கூற முடியாது.

ஊட்டச்சத்தை தீர்மானிப்பது எது?

உதாரணமாக, ஒமேகா-3 சத்து நிறைந்த தீவனம் கொடுக்கப்படும் கோழிகளின் முட்டை களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கும். சில வகை தீவனங்களை பொறுத்து வைட்டமின் டி அளவும் அதிகரிக்கக்கூடும்.

தீவனத்தின் தன்மை

முட்டை வாங்கும்போது தரமான தீவனம் கொடுத்து வளர்க்கப்பட்ட கோழிகளின் முட்டை களை தேர்வு செய்யலாம். குறிப்பாக பிரீ ரேஞ்ச் (திறந்த வெளியில் வளர்க்கப்பட்ட கோழி களின் முட்டை), கேஜ் பிரீ (கூண்டில் அடைக்காமல் வளர்க்கப்பட்ட கோழிகளின் முட்டை). ஆர்கானிக் (இயற்கை முறையில் ரசாயனம் இல்லாத தீவனம் கொடுத்து வளர்க்கப்பட்ட கோழிகளின் முட்டை) அல்லது ஒமேகா-3 என்ரிச்டு (ஒமேகா-3 சத்து அதிகரிக்கும் வகையில் சிறப்பு தீவனம் கொடுத்து வளர்க்கப்பட்ட கோழிகளின் முட்டை) என்று குறிப்பிடப்பட்டிருக்கும் முட்டைகளை தேர்வு செய்யலாம். முட்டைகளை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பாக சேமித்து வைப்பது சிறந்தது.

எந்த முட்டையை தேர்வு செய்யலாம்?

வெள்ளை முட்டையும், பழுப்பு நிற முட்டையும் ஊட்டச்சத்து அடிப்படையில் கிட்டத்தட்ட ஒன் றுதான். எனவே, முட்டையின் நிறத்தை வைத்து எது சிறந்தது என்று முடிவு செய்ய வேண் டிய அவசியமில்லை. கோழி வளர்க்கப்பட்ட முறை, அதன் தீவனத்தின் தரம் ஆகியவற்றை கவனித்து தேர்வு செய்வதே சிறந்தது.

X