யார் இந்த ‘ஷெபாலி வர்மா'?

அரியானா மாநிலம் ரோஹ்டக் பகுதியைச் சேர்ந்தவர் ஷெபாலி வர்மா. இவரது தந்தை நகை வியாபாரி. 10 வயதில், கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்கப்படுத்திய அவரது தந்தை, கிரிக்கெட் அகாடமியில் சேர்த்துவிட்டார்.
யார் இந்த ‘ஷெபாலி வர்மா'?
Published on

சிறுவர்கள் நிரம்பியிருந்த அகாடமியில், ஷெபாலிக்கு தோழிகளே இல்லை. அதேசமயம் சிறுவர்கள் விளையாட்டில், ஷெபாலியை சேர்க்காமல் ஒதுக்க ஆரம்பித்தனர். அதற்காக, ஷெபாலி என்ன செய்தார் தெரியுமா..? ஆண் பிள்ளைப்போல முடி வெட்டிக்கொண்டு, பயிற்சி பெற தொடங்கினார். பின்னர் படிப்படியாக முன்னேறி அரியானா மகளிர் அணியில் இடம்பிடித்தார். 2019-ம் ஆண்டு 15 வயதில் இந்திய மகளிர் டி-20 அணியில் இடம்பிடித்தார். இவர் 15 வயது 285 நாட்களில் அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்தார்.

இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயது 213 நாட்களில் டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்திருந்தார். அதுவே அப்போதுவரை சாதனையாக இருந்தது. அதன்பின்னர் மகளிர் கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உருவெடுத்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கி எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். சமீபத்தில்கூட, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுக வீராங்கனையாக களமிறங்கி, முதல் அரை சதத்துடன் தன்னுடைய சாதனை கணக்கை தொடங்கி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com