விமானத்தின் வால் ஓடுபாதையில் மோதுவது ஏன்?

சில விமானங்களில் இதற்கு என தடுப்பு அமைப்புகளும் உள்ளன.
ஓடுபாதையில் மோதுவது ஏன்?
Published on: 

ஒரு விமானம் புறப்படும்போது அதன் மூக்கு பகுதி மேலே உயர வேண்டும். ஆனால் அளவுக்கு அதிகமாகவோ, மிக வேகமாகவோ அந்த பகுதியை உயர்த்தினால், விமானத்தின் பின்பகுதி ஓடுபாதையில் மோதக்கூடும். பொதுவாக விமா னம் குறிப்பிட்ட வேகத்தை அடைந்ததும், விமானி அதன் மூக்கு பகுதியை மேலே உயர்த்துவார். இந்த செயல்முறை 'ரொட்டேஷன்' எனப்படுகிறது. அப்போது விமானத்தின் முன்பகுதியை அளவுக்கு அதிகமாக உயர்த்தினால், விமானத்தின் வால் பகுதி ஓடுபாதையில் உரசும் அபாயம் ஏற்படலாம். இது 'வால் உராய்வு' (டெயில் ஸ்டிரைக்) எனப்படுகிறது.

இந்த நிகழ்வு புறப்படும்போது மட்டுமல்ல, தரையிறங்கும்போதும் நடக்கலாம். தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் மூக்கு பகுதியை அளவுக்கு அதிகமாக உயர்த்தினாலும் வால் பகுதி தரையில் மோதலாம்.

இதனால் விமானத்தின் அடிப்பகுதியில் கீறல்கள் ஏற்படுவதுடன், முக்கியமான கட்டமைப்பு பகுதிகளும் சேதமடையலாம். எனவே இத்தகைய சம்பவத்துக்கு பிறகு விமானம் முழுமையாக ஆய்வு செய்யப்படும்.

இந்த அபாயத்தை தவிர்க்க விமானிகள் சரியான புறப்பாட்டு வேகம். விமானத்தை உயர்த்த வேண்டிய கோணம், தரையிறங்கும் நடைமுறைகள் ஆகியவற்றை பின்பற்றுகின்றனர்.

சில விமானங்களில் இதற்கு என தடுப்பு அமைப்புகளும் உள்ளன. விமானத்தின் மூக்கு பகுதியில் ஏற்படும் சிறிய கோண மாற்றம் கூட அதன் பின்பகுதியில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

சாலையில் வாகனங்கள் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சென்றால் அதுவே அதிவேகம். ஆனால்,பயணிகள் விமானத்தின் வேகம் எவ்வளவு தெரியுமா? ஏறக்குறைய மணிக்கு 1000 கி.மீ.. நவீன போர்விமானத்தின் குறைந்தபட்ச வேகம் ஏறக்குறைய மணிக்கு 1200 கி.மீ. இவ்வளவுவேகத்தில் பறக்கிற விமானத்தில் பயணத்தூரத்தை சீக்கிரம் கடக்க முடியுமென்றாலும் தரையிறக்கும் போது சிக்கல். இதனால்தான் நீண்ட ஓடுபாதை தேவைப்படுகிறது.

X