என்னப்பா சொல்லுறீங்க.. ஒமைக்ரான் வைரஸ் தோன்ற எய்ட்ஸ் நோய் தான் காரணமா..?

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் கொரோனா வைரஸ் அதிக நாட்கள் தங்கியிருந்து புதிய வகை உருமாற்றங்களை அடைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
என்னப்பா சொல்லுறீங்க.. ஒமைக்ரான் வைரஸ் தோன்ற எய்ட்ஸ் நோய் தான் காரணமா..?
Published on

டர்பன்,

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும் என்பதால் கொரோனா வைரஸ் எளிதில் உருமாற்றம் அடைந்து புதிய வகை கொரோனா திரிபுகள் ஏற்படுகின்றன என தென் ஆப்பிரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் ஒமைக்ரான் வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மனிதர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்ட்டவர்கள் உடலில் கொரோனா வைரஸ் அதிக நாட்கள் தங்கியிருந்து புதிய வகை உருமாற்றங்களை அடைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் புற்றுநோய் சிகிச்சையில் உள்ள நோயாளிகளாக இருக்கலாம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களாக இருக்கலாம் , முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாத எய்ட்ஸ் நோயாளிகளாக இருக்கலாம். இவர்களிடமிருந்து கொரோனா வைரஸ் அதிக உருமாற்றங்களை அடைந்து புதிய வகை கொரோனா வைரசாக உருவெடுக்கிறது.

உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு எச்.ஐ.வி-யுடன் வாழ்பவர்கள் ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளில் உள்ளனர். அங்கு 80 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோய்ககான சிகிச்சை முறையாக பெற முடியாத நிலை உள்ளது. ஆப்பிரிக்காவில் எச்ஐவி உள்ளவர்களில் 80% பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள்.

கட்டுப்பாடற்ற எச்ஐவி உள்ளவர்கள் கொரோனா வைரஸால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டர்பனில் உள்ள குவாசுலு-நடால் பல்கலைக்கழக தொற்று நோய் மருத்துவர் டாக்டர் ரிச்சர்ட் லெசெல்ஸ் கூறுகையில், கொரோனாவை பெரும் சாவாலாக எதிர்த்து போராடும் அதே வேளையில், எச்.ஐ.வி.யை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனையாக ஒழிப்பதற்கான முயற்சிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.

எச்.ஐ.வி-யால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனப்படுத்தப்பட்டு கொரோனா வைரசின் புதிய பரிணாமத்தை உண்டாக்குகிறது என்றால்,அதைத் தடுக்க ஆன்டி-ரெட்ரோவைரல் சிகிச்சையை அதிகரிக்க வேண்டும்.

அதிக அளவில் கட்டுப்பாடற்ற எச்.ஐ.வி பாதித்த நாடுகளில் கொரோனா பெருந்தொற்றை திறம்பட கையாள தவறினால், புதிய வகை கொரோனா வைரஸ் உருமாற்றங்கள் ஏற்பட்டு கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனை குறைத்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.

ஆல்பா மற்றும் பீட்டா வகை வைரஸ்கள் கடந்த ஆண்டு முறையே இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஒரு நபர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டிருந்தால், தொற்று பல மாதங்கள் நீடிக்கும். அந்த சமயம் உடலில் இருக்கும் ஆன்டிபாடிகள் வைரசை எதிர்த்து போராடும், ஆனால் முற்றிலும் வைரசை அழித்துவிடாது.அதனால், இந்த எஞ்சியிருக்கும் வைரஸ்கள் பெருகி, மாற்றமடைகின்றன.

டாக்டர் லெசெல்ஸ் தென்னாப்பிரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து 36 வயது பெண்ணிடம் நடத்திய ஆய்வில், அந்த பெண்மணி 216 நாட்களுக்கு கோவிட் வைரஸைக் கொண்டிருந்தார், அந்த நேரத்தில் அது 32 உருமாற்றங்களைக் குவித்தது, அதன்மூலம் பீட்டா வகை கொரோனா திரிபு ஏற்பட வாய்ப்பாக அமைந்தது என்பதை கண்டறிந்தனர்.

தென்னாப்பிரிக்காவில் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் மற்றும் விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பென்னி மூர் தெரிவித்திருப்பதாவது, நோய்த்தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்வோர் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் ஆகியோரால் கொரோனா வைரசின் புதிய உருமாற்றங்கள் சாத்தியமாகிறது.

கொரோனா பெருந்தொற்றை கையாளும் அதே வேளையில், நாம் எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிகம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

கொரோன தடுப்பூசிகள் அதிக அளவில் கிடைக்க செய்ய வேண்டும். ஆனால் நிலைமை மாறாக இருக்கிறது. எச் ஐ வி பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் தடுப்பூசிகள் குறைவாகவே இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com