விங்ஸ் பான்டம் இயர்போன்

விங்ஸ் நிறுவனம் தற்போது பான்டம் 200 என்ற பெயரில் புதிய வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
விங்ஸ் பான்டம் இயர்போன்
Published on

காதில் கச்சிதமாக பொருந்தும் வகையிலான வடிவமைப்பு மற்றும் சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது. வியர்வை, தூசி உள்புகாத வகையிலான வடிவமைப்பு கொண்டது. வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கும் இது ஏற்றது.

இதில் உள்ள டி.என்.எஸ். மைக்ரோபோன் சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்ப்பதோடு ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்கவும் உதவுகிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் செயல் படக்கூடியது. கருப்பு, வெள்ளை நிறங்களில் வந்துள்ள இந்த இயர்போனின் விலை சுமார் ரூ.999.

X

Daily Thanthi
www.dailythanthi.com