

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்றது. தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் பிராஸஸ் டெக்னீசியன், அசிஸ்டன்ட் பாய்லர் டெக்னீசியன், அசிஸ்டன்ட் லேபரேட்டரி அனலிஸ்ட், அசிஸ்டன்ட் மெயின்டனன்ஸ், பயர் ஆபரேட்டர் போன்ற பணிகளுக்கு மொத்தம் 122 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பி.எஸ்சி. வேதியியல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்ட், பயர்பைட்டிங் போன்ற டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், பாய்லர் அட்டன்ட் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் குறிப்பிட்ட பணிகளுக்கு திறமைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 31-10-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.