இரண்டாம் உலகப்போர்

ஹிட்லர் முதலாம் உலகப்போரில் ஐரோப்பா இழந்த பகுதிகளை மீட்டெடுக்க ஆயத்தமானார். ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து போர் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் உலகப்போர்
Published on

முதலாம் உலகப்போரால் ஜெர்மனி ஒரு ஜனநாயக நாடானது. அதே நேரம் ஜெர்மனி மீது சர்வதேச சங்கம் சுமத்திய நஷ்ட ஈட்டு தொகை 650 கோடி பவுண்டுகள். இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் வேலையின்றித் தவித்தனர். இவ்வாறு நாடு நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தபோது ஆங்காங்கே சில புரட்சியாளர்கள் உதயமானார்கள். அதில் ஒருவர் ஹங்கேரியில் பிறந்தவரான அடால்ப் ஹிட்லர். முதலாம் உலகப்போர் நடந்த போது ராணுவ வீரராக இருந்த ஹிட்லர் தனது பேச்சாற்றலால் மக்களை பெரிதளவில் ஈர்த்து வந்தார். இதைத்தொடர்ந்து ஹிட்லர் 1920-ம் ஆண்டு தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி (நாசிச கட்சி) என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார்.

1933-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி குறிப்பிடத்தக்க இடத்தை கைப்பற்றியது. ஜெர்மனியின் வேந்தராக ஹின்டன்பர்க் ஜனவரி மாதம் 30-ந் தேதி அன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவர் மரணத்துக்கு பிறகு ஹிட்லர் தன்னை ஜனாதிபதியாக அறிவித்து பதவியேற்று கொண்டு ஆட்சி செய்தார்.

இந்த நிலையில் ஹிட்லர் முதலாம் உலகப்போரில் ஐரோப்பா இழந்த பகுதிகளை மீட்டெடுக்க ஆயத்தமானார். ஹங்கேரியை ஜெர்மனியுடன் இணைத்துக்கொண்டார். போலந்து நாட்டின் மீது ஜெர்மனி போர் தொடுத்தது. இதனால் 1939-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி 2-ம் உலகப்போர் தொடங்கியது. ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகள் ஒரு அணியாகவும், சோவியத் யூனியன், பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நேச நாடுகள் ஒரு அணியாகவும் செயல்பட்டன. போலந்துக்கு ஆதரவாக பிரான்ஸ் போரில் ஈடுபட்டது. பிரான்சுக்கு ஆதரவாக பிரிட்டன் களமிறங்கியது.

ஜெர்மனி தமது படையெடுப்பின் மூலம் டென்மார்க், நார்வே நாடுகள், மேற்கு ஐரோப்பாவின் பகுதிகளான நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகியவற்றை கைப்பற்றியது. வடக்கு பிரான்ஸ் பகுதியை ஜெர்மனி கைப்பற்ற பாதி பிரான்ஸ் ஜெர்மனி வசம் வந்தது. இதையடுத்து பிரான்ஸ் சரணடைந்தது.

இதைத்தொடர்ந்து ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் 1940-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி ஒரு நாடு பாதிக்கப்பட்டால் மற்ற இரு நாடும் அவர்களுக்கு ஆதரவாக போரில் இறங்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் கையெழுத்திடப்பட்டது.

இதையடுத்து ஜெர்மனி சோவியத் யூனியன் மீது மிகப்பெரிய படையை 1941-ம் ஆண்டு ஜூன் 22-ந் தேதி அன்று களமிறக்கியது. ஏறத்தாழ 40 லட்சம் போர் வீரர்கள் போரிட்டனர்.

இதற்கு காரணம் ஜெர்மனி போரிட்டு மீண்டும் கையகப்படுத்திய ஐரோப்பாவின் நாடுகளான போலந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளையும், பால்டிக் நாடுகளையும் சோவியத் யூனியன் கைப்பற்றியது தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் சோவியத் யூனியன், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பலமுனை தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜெர்மனி சரணடைந்தது.

1945-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி அன்று முசோலினி தூக்கிலிடப்பட்டார். ஏப்ரல் 30-ந் தேதி அன்று அடால்ப் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து போர் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com