ஜியோமி 13 புரோ

ஜியோமி நிறுவனம் புதிதாக ஜியோமி 13 புரோ எனும் புதிய மாடல் பிரீமியம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோமி 13 புரோ
Published on

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.79,999. இதில் 6.73 அங்குல சாம்சங் அமோலெட் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 8-வது தலைமுறை ஸ்நாப்டிராகன் பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் வி.சி. கூலிங் நுட்பம் உள்ளதால் ஸ்மார்ட்போன் சூடேறுவது தவிர்க்கப்படுகிறது.

இது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டது. இதன் பின்புறம் 3டி பயோ செராமிக் பகுதியைக் கொண்டது. இது ஸ்மார்ட்போனுக்கு அதிகபட்ச பாதுகாப்பை அளிக்க உதவுகிறது. இதன் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. 4,820 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 120 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. இரண்டு சிம்கார்டு போடும் வசதி உள்ளது. செல்பி பிரியர்களுக் கென முன்புறம் 32 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. கருப்பு, வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com