ஜியோமி புக் ஏர் 3 லேப்டாப்

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஜியோமி நிறுவனம் புதிதாக ஜியோமி புக் ஏர் 3 லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோமி புக் ஏர் 3 லேப்டாப்
Published on

இது 13.3 அங்குல இ 4 ஓலெட் திரை மற்றும் தொடு திரை செயல்பாட்டையும் கொண்டது. இதன் மேல்பாகம் அலுமினியம் அலாய் உலோகத்தால் ஆனது. லேசான எடை (1.2 கி.கி.) கொண்டது.

இதில் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதி உள்ளது. இதன் கீபோர்டு பின்புறம் ஒளிரும் விளக்குகளைக் கொண்டுள்ளது. இதில் 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது.

இதில் 12-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ-7 பிராசஸர் உள்ளது. 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் கொண்டது. 58.3 வாட் அவர் பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் 11 இயங்கு தளம், புளூடூத் 5.2 இணைப்பு வசதி கொண்டது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.56,931.

X

Daily Thanthi
www.dailythanthi.com