யமஹா ஒய்.இஸட்.எப். ஆர் 3

ஜப்பானின் யமஹா நிறுவனம் புதிதாக ஒய்.இஸட்.எப். ஆர் 3 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
யமஹா ஒய்.இஸட்.எப். ஆர் 3
Published on

இளைஞர்களை அதிகம் கவரும் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் ஜப்பானின் யமஹா நிறுவனம் புதிதாக ஒய்.இஸட்.எப். ஆர் 3 மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஆரஞ்சு வண்ணத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இது வந்துள்ளது.

இந்த ஆரஞ்சு வண்ணத்திற்கு விவிட் ஆரஞ்சு என பெயர் சூட்டியுள்ளது. இது தவிர மெட்டாலிக் கிரே, மிட்நைட் கருப்பு மற்றும் ரேசிங் நீலம் உள்ளிட்ட நிறங்களிலும் வந்துள்ளது. இதில் புதிதாக எல்.இ.டி. பல்பு இண்டிகேட்டர் உள்ளது. இதன் எடை 170 கிலோவாகும். இது 321 சி.சி. திறன் கொண்டது. பேரலல் டுவின் லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டுள்ளது. இது 41 பி.எஸ். திறனையும், 0.98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும்.

இதில் டி.ஓ.ஹெச்.சி. என்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின் சக்கரங்களுக்கு டிஸ்க் பிரேக் வசதி உள்ளது. 14 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இதன் பெட்ரோல் டேங்க் உள்ளது. டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர், டிரிப் மீட்டர், ஓடோ மீட்டர் மற்றும் செல்ப் ஸ்டார்ட் வசதி மட்டுமே கொண்டது.

இதில் பியூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் உள்ளது. 6 கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 188 கி.மீ. ஆகும். டயமண்ட் பிரேம், டியூப்லெஸ் டயர் இதன் சிறப்பாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com