அழகும், ஆபத்தும் நிறைந்த ‘யெல்லோஸ்டோன் பூங்கா’

அமெரிக்காவின் பார்க் கவுண்டி வ்யோமிங் பகுதியில் இருக்கிறது, யெல்லோஸ்டோன் உயிரியல் பூங்கா. உலகின் முதல் தேசிய பூங்காவான இது 1872-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி உருவாக்கப்பட்டது.
அழகும், ஆபத்தும் நிறைந்த ‘யெல்லோஸ்டோன் பூங்கா’
Published on: 

இதன் மொத்த பரப்பளவு 8,987 சதுர கிலோ மீட்டர். 5 நுழைவுவாயில்களை கொண்டது. 466 கிலோ மீட்டர் சாலை வழியாக பூங்காவில் பயணிக்க முடியும். 5 சதவீத நீராலும், 15 சதவீத புல்வெளியாலும் சூழப்பட்டுள்ள இந்த பூங்கா 80 சதவீத அடர்ந்த காடுகளை உள்ளடக்கியது. இந்த பூங்காவில் 15 கிலோ மீட்டர் வரை மட்டுமே நடப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

உலக சுற்றுலா பயணிகளின் முதல் விருப்பமாக இருக்கும் இந்த யெல்லோஸ்டோன் பூங்கா, இயற்கையாக எவ்வளவு அழகை கொண்டிருக்கிறதோ, அவ்வளவு ஆபத்தையும் கொண்டிருக்கிறது. பூங்காவில் இருக்கிற ஒவ்வொன்றும் அழகு. அந்த ஒவ்வொன்றும் ஆபத்தும் கூட...

யெல்லோஸ்டோன் பூங்காவில் 340 அருவிகள் இருக்கின்றன. 300 வெப்ப நீரூற்றுகள் உள்ளன. எல்லாமே ஆபத்தானது தான். இங்கிருக்கும் ஓல்ட் பெய்த்புல் என்கிற வெப்ப நீரூற்று ஒவ்வொரு முறையும் 32 ஆயிரம் லிட்டர் வெப்ப நீரை 180 அடிக்கு மேல் கொப்பளிக்கிறது. ஆரம்ப காலங்களில் 60 நிமிடங்களுக்கு ஒருமுறை வெடித்தது. இப்போது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒருமுறை கொப்பளிக்கிறது.

யெல்லோஸ்டோன் குறைந்தபட்சம் 10 ஆயிரம் புவி வெப்ப அம்சங்களை கொண்டுள்ளது. நிலப்பரப்பு அம்சங்கள் மற்றும் உலகின் வெப்ப நீரூற்றுகளில் மூன்றில் 2 பங்கு யெல்லோஸ்டோனில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆபத்துகள் நிறைந்த இந்த பூங்காவில் பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. கடா மான்கள், மான்கள், கூர் கொம்புடைய மான்கள், மலை சிங்கங்கள், நீர் நாய்கள், ஓநாய்கள் என பல வகையான விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக எருமைகள் இங்கு அதிக அளவில் வாழ்கின்றன.

உலகின் சுதந்திரமாக எருமைகள் வாழும் ஒரே இடமாக யெல்லோஸ் டோன் இருக்கிறது.

பூமிக்கடியில் இருக் கும் ஒரு மாபெரும் எரி மலையின் வாய்ப்பகுதி யில் இந்த பூங்கா அமைந்திருப்பது கவனத்தில் கொள்ளக்கூடிய விஷயம். சூப்பர் வல்கனோ என்று இந்த எரிமலையை சொல்கிறார்கள். சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த எரிமலை வெடித்திருக்கிறது. எரிமலையை பற்றி குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் யெல்லோஸ்டோன் பூங்கா வருடத்திற்கு 2 ஆயிரம் முறை நிலநடுக்கத்தை சந்தித்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com