ஆட்சியிலும் பங்கு... அதிகாரத்திலும் பங்கு - திருமாவளவன் பகிர்ந்த வீடியோவால் பரபரப்பு


ஆட்சியிலும் பங்கு... அதிகாரத்திலும் பங்கு - திருமாவளவன் பகிர்ந்த வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Sept 2024 11:51 AM IST (Updated: 14 Sept 2024 11:58 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சி, அதிகாரம் குறித்து தான் பேசிய பழைய வீடியோவை திருமாவளவன் பகிர்ந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2-ந்தேதி மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அ.தி.மு.க. மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்த மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் ஆட்சி, அதிகாரம் குறித்து தான் பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் திடீரென பகிர்ந்து பின்னர் நீக்கியதால் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


"ஆட்சியிலும் பங்கு... அதிகாரத்திலும் பங்கு... கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்!" என்று பதிவிட்டு அவர் பகிர்ந்த அந்த வீடியோவில், "கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிகாரத்தில் அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்" என்று பேசியுள்ளார்.

1 More update

Next Story