தமிழகத்தில் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில்  19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 15 Jun 2024 1:46 PM IST (Updated: 15 Jun 2024 3:59 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் ஒருசில இடங்களில் வரும் 19ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

15.06.2024 முதல் 19.06.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.06.2024 மற்றும் 21,06,2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

15.06.2024 முதல் 19.06.2024 வரை; அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2 - 3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை / இரவு வேளையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story