சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
Published on

சென்னை,

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 38 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று முதல் வணிக சிலிண்டர் விலை 1,855 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com