விஜய்க்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
விஜய்க்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து
Published on

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தனது கட்சியின் கொடியை நடிகர் விஜய் உறுதிமொழி எடுத்து இன்று அறிமுகம் செய்து வைத்தார். கொடியானது சிகப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களில், 2 போர் யானைகள், வாகை மலர் மற்றும் 28 நட்சத்திரங்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், த.வெ.க. கொடி அறிமுகம் செய்யப்பட்டதையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "வாழ்த்துகள் விஜய் அண்ணா" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com