மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன...?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22-ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்து இருக்கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது. கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்து வந்தது.

ஆனால் நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.56, 760-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.56, 960-க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.7,120-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 103-க்கும், ஒரு கிலோ ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com