குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 7 தமிழர்கள் பலி


குவைத்  அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து:  7 தமிழர்கள் பலி
x
தினத்தந்தி 13 Jun 2024 10:47 AM IST (Updated: 13 Jun 2024 4:25 PM IST)
t-max-icont-min-icon

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான தமிழர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

குவைத்தின் தெற்குபகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இரண்டு தமிழர்களும் பலியானதாக நேற்று தகவல் வெளியானது. அதன்பின்னர் மேலும் ஒரு தமிழர் பலியாகியிருக்கும் தகவல் கிடைத்தது. ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பணன் ராமு, குவைத் தீ விபத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருப்பதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story