ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்

காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்
Published on

சென்னை,

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைத்துள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், எம்.பி.யாக நேற்று முன்தினம் பதவியேற்று கொண்டனர். அவர்களில் மீதமிருந்தவர்கள் நேற்று எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அரசியல் சாசன நகல் ஒன்றை கையில் பிடித்தபடி எம்.பி.யாக நேற்று பதவியேற்று கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் இயற்றியது. இதனை ராகுல் காந்தி ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துகள்', என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com