

சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய 'முரசு' புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணி அள வில் தீவிர புயலாக மாறியது. இது மேற்கு-வடமேற்கு திசை யில் நகர்ந்து நேற்று காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவியது.
இந்த புயல் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே இன்று கரையை கடக்கக்கூ டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புயல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர் மாவட் டங்களுக்கு பலத்த காற்றுடன் கன மழை எச்சரிக்கை விடப் பட்டது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கனமழை காரணமாக கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அறிவித்துள்ளார்.