காந்தி கொள்கைகளை கொல்லும் மோடி - வேணு கோபால்

வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு மோடி முழுவதுமாக அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார் என காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறியுள்ளார்.
காந்தி கொள்கைகளை கொல்லும் மோடி - வேணு கோபால்
Published on

சென்னை,

மத்திய அரசை கண்டித்து சென்னை முகப்பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரையாக பயணம் மேற்கொண்டனர். செல்வபெருந்தகை தலைமையிலான பாதயாத்திரையை தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் தொடங்கி வைத்தார்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு சிதைப்பதாக குற்றம்சாட்டி காங்கிரசார் பாதயாத்திரை மேற்கொண்டனர். காங்கிரஸ் பாதயாத்திரையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக பாதயாத்திரை தொடங்கும் முன் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் பேசியதாவது:-

காந்தியை கோட்சே கொன்றார். காந்திய கொள்கைகளை மோடி அரசு தினமும் கொல்கிறது. உலகிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது.

இந்த திட்டத்துக்கு முன்பு நூறு சதவீதம் நிதியை மத்திய அரசு வழங்கியது. தற்போது அதை பாஜக அரசு குறைத்துவிட்டது. வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு மோடி முழுவதுமாக அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com