பிப்.20-ம் தேதி முதல் திமுக விருப்ப மனு: துரைமுருகன் அறிவிப்பு

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் விண்ணப்ப கட்டணம் திருப்பி தரப்படும் என துரைமுருகன் கூறியுள்ளார்.
பிப்.20-ம் தேதி முதல் திமுக விருப்ப மனு: துரைமுருகன் அறிவிப்பு
Published on

சென்னை,

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாடு - புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பிப்.20 முதல் மார்ச் 2 வரை விண்ணப்பிக்கலாம். திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 முதல் விருப்பமனு அளிக்கலாம்.

பொதுத் தொகுதிக்கு ரூ.25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.15,000 விருப்ப மனு கட்டணமாக வசூலிக்கப்படும்.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் விண்ணப்ப கட்டணம் திருப்பி தரப்படும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com