வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

கழுகுமலை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
Published on

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சின்ன காலனி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54). இவரது மனைவி சுசிலா. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளாராம். இவர்களுக்கு கமல்ராஜ், முரளிராஜ் ஆகிய 2 மகன்களும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். இதில் முரளிராஜ் (22) உடுமலைப்பேட்டையில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. அம்மாவும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனக்கும் நோய் இருந்ததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கழுகுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com