ஓடையில் மூழ்கி கோவில் பூசாரி சாவு

Temple priest drowned in stream
ஓடையில் மூழ்கி கோவில் பூசாரி சாவு
Published on

நாமக்கல் அருகே ஓடையில் மூழ்கி கோவில் பூசாரி பரிதாபமாக இறந்தார்.

கோவில் பூசாரி

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே எஸ்.பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது52). இவர் பழையபாளையம் அங்காளம்மாள் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு கோவிலுக்கு பூஜைக்கு சென்ற மகாலிங்கம் பூஜையை முடித்து விட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

அங்குள்ள சிவன் கோவிலுக்கு எதிரே உள்ள நீரோடை வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தபோது திடீரென வழுக்கி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவினர் மகாலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி (49) நாமக்கல் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com