பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

இடைகாலில் பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
Published on

கடையநல்லூர்:

பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கடையநல்லூர் ஒன்றியம் இடைகால் பஸ் நிறுத்தம் முன்பு பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் தர்மர் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர்கள் ஜெயராஜ், செல்வகுமார், நெடுவயல் பஞ்சாயத்து தலைவர் முப்புடாதி, ஒன்றிய பார்வையாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் மாரியப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ரங்கராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com