ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தனர்.
Published on

ராமேசுவரம், 

ராமேசுவரத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்தபோது, 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்து இருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை மிக குறைந்த அளவிலான மீன்களுடன் ராமேசுவரம் மீனவர்கள் கரை திரும்பினார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com