ராமேசுவரத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்திய கடலோர போலீசார்

ராமேசுவரத்தில் கடலோர போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
ராமேசுவரத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்திய கடலோர போலீசார்
Published on

ராமேசுவரம், 

மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பின்னர் இந்தியா முழுவதும் உள்ள கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதுபோல் தமிழகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடல் வழியாக தீவிரவாதிகள் போல் வேடமிட்டு வரும் நபர்களை பிடிப்பதற்கான சி.விஜில் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகையானது நேற்று காலை 6 மணியிலிருந்து தமிழக கடலோரப் பகுதிகளில் தொடங்கியது. இந்த பாதுகாப்பு ஒத்திகையை தொடர்ந்து ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் கடலோர போலீசார் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே ராமேசுவரம் துறைமுக கடற்கரை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் டம்மி வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் போல் வேடமிட்டு வந்த 21 நபர்களை கடலோர போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் இந்த நபர்கள் அனைவரும் கமாண்டா படை வீரர்கள் என்பதும் பாதுகாப்பு ஒத்திகைக்காக தீவிரவாதிகள் போல் வேடமிட்டு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது. ராமேசுவரம் கோவில், டி.வி.டவர், கலங்கரை விளக்கம், மற்றும் உப்பூர் அணுமின் நிலையம், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க வந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பாதுகாப்பு ஒத்திகையானது இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com