மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல்; வாலிபர் கைது

நெல்லையில் மின்வாரிய ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
Published on

நெல்லை மூன்றடைப்பு கோடீஸ்வரன்நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் ரெட்டியார்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று டக்கரம்மாள்புரம் பகுதியில் மின்பழுது ஏற்பட்டதை சரிசெய்ய சென்றார். அப்போது அங்கு வந்த ரெட்டியார்பட்டியை சேர்ந்த பண்டாரம் மகன் வெற்றிவேல் (வயது 27), பெருமாள் மகன் தினேஷ் (25) ஆகியோர் ராமலிங்கத்திடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமலிங்கம் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com